×

தமிழ் பையன் இந்தி பொண்ணு

சென்னை: சூப்பர் ஸ்டார் பிலிம்ஸ் சார்பில் சமீர் அலிகான் தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம், ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’. இதற்கு முன்பு அவர், ‘காதல் மட்டும் வேணா’ என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். மான்சி, ‘ஆடுகளம்’ நரேன், பிரம்மாஜி, அலி, சோனியா போஸ், உதயதீப், மாலா பார்வதி, தீபிகா அமின், ‘கும்கி’ அஸ்வின் நடிக்கின்றனர்.

கோவை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகிறது. சமீர் அலிகான் கூறுகையில், ‘வெவ்வேறு பின்னணி கொண்ட ஹீரோவும், ஹீரோயினும் காதலிக்கின்றனர். அப்போது ஏற்பட்ட தடைகளை உடைத்து காதலில் ஜெயித்தார்களா என்பது கதை’ என்றார்.

Tags : Chennai ,Sameer Ali Khan ,Mansi ,Naren ,Brahmaji ,
× RELATED ஜனவரி 16ல் ஜூலி காதல் திருமணம்