×

சிறுமி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பெண் கைது

ஆவடி: அயப்பாக்கத்தை சேர்ந்த சீனிவாசன் (36) இவரது மகள் 10 வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 2021 ஜூன் மாதம் 1ம் தேதி மாயமானார். அயப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சித்ராவின் வீட்டிற்கு  இவர்  அடிக்கடி செல்வாராம். அப்போது சித்ராவின் மாமா மகன் வெங்கடேசன் (36) கடத்திச்சென்றது தெரியவந்துள்ளது. போலீசார் சிறுமியை மீட்டு வெங்கடேஷனை ஏற்கனவே கைது செய்தனர். விசாரணையில்,  வெங்கடேஷன் சிறுமியை கடத்த உடந்தையாக இருந்தவர் ராஜேஸ்வரி. இவர் கடந்த ஒன்னறை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். போலீசார் தனிப்படை அமைத்து ராஜேஸ்வரியை தேடினர். இந்நிலையில் நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ராஜேஸ்வரி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று ராஜேஸ்வரியை கைது செய்தனர். திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ராஜேஸ்வரியை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்….

The post சிறுமி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Srinivasan ,Ayappakkam ,Dinakaran ,
× RELATED ரூ.10,000 லஞ்சம் ; பெண் தாசில்தார் கைது