×

தமிழில் நடிக்கும் இன்னொரு ரோஷிணி

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம், ‘மெட்ராஸ் மேட்னி’. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெங்கட் பிரபுவும், ஜி.வி.பிரகாஷ் குமாரும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினர். கார்த்திகேயன் மணி இயக்கியுள்ள இதில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷிணி ஹரிப்பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக், சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா நடித்துள்ளனர். ஆனந்த் ஜி.கே ஒளிப்பதிவு செய்ய, கே.சி.பாலசாரங்கன் இசை அமைத்துள்ளார். எக்ஸிகியூட்டிவ் புரொடக்‌ஷன் பணிகளை மொமெண்ட் எண்டர்டெயின்மெண்ட் மேற்கொண்டது.

படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் டைட்டிலுக்கான வீடியோவில் சத்யராஜின் கம்பீர குரலும், தோற்றமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வரும் ஜூன் மாதம் படம் ரிலீசாகிறது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘வணங்கான்’ என்ற படத்தில் நடித்தவர், ரோஷிணி பிரகாஷ். தமிழில் தொடர்ந்து அவர் நடிக்கும்போதே ‘கருடன்’ ரோஷிணி ஹரிப்பிரியனும் தனது பெயரிலுள்ள ரோஷிணியை மாற்றாமல் நடித்து வருகிறார்.

‘மெட்ராஸ் மேட்னி’ படம் குறித்து கார்த்திகேயன் மணி கூறுகையில், ‘தமிழ் இலக்கியங்கள் மீது ஆர்வம் கொண்ட நான், ‘கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே’ என்ற புறநானூற்று பாடலை மையப்படுத்தி குறும்படம் இயக்கினேன். இப்போது இயக்கிய திரைப்படம், நான் பிறந்த எம்.ஜி.ஆர் நகரில் பார்த்த சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ஃபேமிலி டிராமாவாக, போலித்தனம் இல்லாமல் இருக்கும். அறிவியல் புனைக்கதை எழுத்தாளராக சத்யராஜ் நடித்துள்ளார்’ என்றார்.

Tags : Roshini ,Madras Motion Pictures Productions ,Venkat Prabhu ,G.V. Prakash Kumar ,Karthikeyan Mani ,Sathyaraj ,Kaali Venkat ,Roshini Haripriyaan ,
× RELATED மாடியில் மயக்கிய பூனம் பஜ்வா