×

கடலோரம் மேலாண்மைச் சட்டத்தை மீறி கட்டப்பட்ட 64 விடுதிகள்: இடிக்க ஆணை பிறப்பித்த உச்சநீதிமன்றம்

கேரளா : கேரள மாநிலம் ஆலப்புழா அடுத்த வேம்பநாட்டு காயிலில் விதிகளை மீறி கட்டப்பட்ட இருக்கும் 64 சுற்றுலா பகுதிகளை இடிக்கும் பணி மாவட்ட நிர்வாகத்தால் தொடங்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி மருட பகுதியில் கடலோரம் மேலாண்மைச் சட்டத்தை மீறி கட்டப்பட்ட 4 அடுக்கு மாடி சொகுசு குடியிருப்புகள் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. தற்போது அதை போலவே ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள தீவில் 64 சுற்றுலா விடுதிகள் இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆடம்பர விடுதிகளை 11 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2015ம் ஆண்டு 200 கோடி ரூபாய் செலவில் தனியார் நிறுவனம் ஒன்று காட்டத் தொடங்கியது. பணிகள் முழுமையாக முடிந்த நிலையில் இந்த விடுதிகள் அனைத்தும் கடலோர மேலாண்மைச் சட்டத்தை மீறி கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இதனை முழுமையாக இடித்து அகற்ற கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இடிக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இடிக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் துவங்கியுள்ளது. 6 மாதங்களுக்குள் இடிக்கும் பணி முழுமையாக முடிவடையும் என்றும் கட்டிட கழிவுகளை வேம்பநாட்டு காயில் நீரை பாதிக்காத வகையில் அப்புறப்படுத்தப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.    …

The post கடலோரம் மேலாண்மைச் சட்டத்தை மீறி கட்டப்பட்ட 64 விடுதிகள்: இடிக்க ஆணை பிறப்பித்த உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Kerala ,Alappuzha ,Vembanadu Coil ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்;...