×

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான ‘கியூட்’ தேர்வு முடிவு வெளியீடு

புதுடெல்லி: ஒன்றிய அரசின் மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு முன்னதாக பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு (கியூட்) நடத்தப்படும். அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான இளங்கலை படிப்புக்கான கியூட் தேர்வை தேசிய தேர்வு முகமை கடந்த ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஆறு கட்டங்களாக நடத்தியது. நாடு முழுவதிலும் 259 நகரங்களிலும், வெளிநாடுகளில் 489 மையங்களிலும் கியூட் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் கியூட் தேர்வு முடிவுகள் நேற்றிரவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்த நிலையில், இன்று அதிகாலை  இளங்கலை படிப்புக்கான கியூட் தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் ‘CUET UG 2022 முடிவுகள்’ என்ற இணைப்பைக் கிளிக் செய்து விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன….

The post மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான ‘கியூட்’ தேர்வு முடிவு வெளியீடு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Universities of ,Union Government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை