புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேடு எல்லையில் தமிழக பகுதியான பட்டானூரில் பிரபல ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில், திண்டிவனத்தை சேர்ந்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவன விற்பனை மேலாளர் டேவிட் (29), நண்பருடன் சாப்பிட வந்தார். அங்கு பர்கர் வாங்கி சாப்பிடும் போது அதில், பிளாஸ்டிக் பொருள் தென்பட்டுள்ளது. உடனடியாக, பர்கர் முழுவதையும் பிரித்து பார்த்தார். அதில் நீலநிற கையுறை இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டேவிட், இதுபற்றி ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார். இதற்கு மன்னிப்பு கேட்ட ஊழியர்கள், வேறு பர்கர் தருவதாக கூறியுள்ளனர். அதற்கு டேவிட் வேண்டாம் எனக்கூறி, ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. …
The post ஓட்டலில் வாங்கிய பர்கரில் கையுறை: சமூகவலைதளத்தில் பரவும் வீடியோ appeared first on Dinakaran.
