×

ஆஹா மல்லிகை!

மல்லிகைப் பூக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய் கர்ப்பப்பைக்கு வலுவூட்டி பிரசவத்தின் போது உண்டாகும் வலியை குறைத்து சுகப்பிரசவத்திற்கு உதவுகிறது. மேலும் கருப்பையில் உண்டாகும் புண்கள், கட்டிகள் நீங்க மல்லிகை எண்ணெயை பயன்படுத்தலாம். மல்லிகை எண்ணெய் மூலம் நாள்பட்ட தழும்புகள், அரிப்புகள் கூட குணமடையும். மல்லிகைப்பூக்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளியினால் ஏற்படும் மூச்சடைப்பு, இருமல் போன்ற தொந்தரவுகள் நீங்க மல்லிகைப் பூக்கள் உதவி செய்கின்றன.மல்லிகை மொட்டுக்களை எடுத்து புண்கள் காயம்பட்ட இடங்கள் கொப்புளங்கள், வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து பூசினால் உடனே குணமடையும். வெளி உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் இருக்கலாம். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். இப்படிப்பட்டவர்கள் நான்கு மல்லிகைப்பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இப்படி அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும். மல்லிகை பூ டீ மிகவும் பிரபலமானது. இதை குடிப்பதன் மூலம் மன அழுத்தம் குறைகிறது. மல்லிகையின் இலை ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது….

The post ஆஹா மல்லிகை! appeared first on Dinakaran.

Tags : Jasmine ,Dinakaran ,
× RELATED மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ...