×

புற்றுநோய் பாதிப்பு தலையில் ஆபரேஷன்: சென்னை விழாவில் சிவராஜ்குமார் உருக்கம்

சென்னை: சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி இணைந்து நடித்துள்ள பான் இந்தியா படம் ‘45’. இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், மிரட்டலான ஃபேண்டஸி ஆக்‌ஷன், திரில்லராக உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆரம்ப காலத்தில் நான் சென்னையில் இருந்த போது தான், எனக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது. நான் ஹீரோவாக என்னை நினைத்ததில்லை, ஹீரோ என்றால் கமல்ஹாசன் மாதிரி அமிதாப் மாதிரி இருக்க வேண்டும் என நினைத்தேன். அவர்கள் தான் என் ஃபேவரைட். நானும் சினிமாவுக்கு வந்தேன், நிறைய தோல்வி, நிறைய வெற்றி பார்த்துள்ளேன். எதையும் தலைக்குள் ஏற்றுக்கொள்ள மாட்டேன். வாழ்க்கையில் பல மரணங்கள், வீழ்ச்சிகள் தொடர்ந்து பார்த்துள்ளேன். எனக்கு தலையில் சர்ஜரி, கேன்சர் என அனைத்தையும் கடந்து வந்தேன், இந்தியா முழுக்க பல ரசிகர்கள் எனக்காக வேண்டினார்கள். இந்த இடத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. இந்தத் திரைப்படம், நல்ல பொழுதுபோக்கு சித்திரமாக இருக்கும் என்றார். எஸ் சுராஜ் புரொடக்‌ஷன் சார்பில் சுமதி.உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம் ரமேஷ் ரெட்டி தயாரித்துள்ளனர்.

Tags : Sivarajkumar Urukkam ,Chennai festival ,Chennai ,Sivarajkumar ,Upendra ,Raj P Shetty ,Arjun Janya ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...