×

ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.5 கோடி இடம் மீட்பு

ஆலந்தூர்: மவுண்ட் -பூந்தமல்லி சாலையில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.5 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். கிண்டி பட்ரோடு – மவுண்ட் பூந்தமல்லி சாலையில் 437 என்ற சர்வே எண்ணில், 26,032 சதுர அடி கொண்ட அரசு நிலத்தை அடையாறு கஸ்தூரிபா நகரை சேந்ந்த குணசுந்தரி என்பவர் பயன்படுத்தி வந்தார். இதுபற்றி அதிகாரிகள் குணசுந்தரியிடம் விசாரித்தபோது, இந்த நிலம் தன்னுடைய தந்தை ராணுவத்தில் பணிபுரிந்தபோது, ராணுவத்தில் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து ஆவணங்களை சரி பார்த்தபோது, அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்றும், அதை குணசுந்தரி ஆக்கிரமித்து இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில், இந்த இடத்தை சுற்றி இரும்பு கேட்டுடன் அமைக்கப்பட்ட மதில் சுவரை பல்லாவரம் தாசில்தார் சகுந்தலா தலைமையில்  ஊழியர்கள் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.5 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். …

The post ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.5 கோடி இடம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Alandur ,Mount-Poontamalli road ,Kindi Patrodu ,Dinakaran ,
× RELATED சென்னை ஆலந்தூர் அருகே வளர்ப்பு நாய்...