×

சினிமா தியேட்டர் பார்க்கிங் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும்; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணம் குறைவாக உள்ளதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள திரையரங்குகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்று கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த உத்தரவை ரத்து செய்து நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கம் சார்பில் 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், சென்னை சென்ட்ரல் நிலையம், பிராட்வே பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு 25 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும், விமான நிலையத்தில் 150 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதை கருத்தில் கொள்ளாமல், திரையரங்குகளில் வாகன நிறுத்தத்துக்கு குறைவான தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்ரமணியன், திரையரங்குகளில் வாகன நிறுத்தத்துக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் குறைவாக உள்ளது. எனவே, இது தொடர்பாக 2017ம் ஆண்டு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வாகன நிறுத்தக் கட்டணத்தை தமிழக அரசு மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்….

The post சினிமா தியேட்டர் பார்க்கிங் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும்; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Govt. Chennai ,Chennai High Court ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை