×

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாடம்பாக்கம் பகுதியில் அடிப்படை வசதியின்றி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, அங்குள்ள சாலைகளில் இரவு நேரத்தில் எண்ணற்ற மாடுகளும், தெரு நாய்களும் சுற்றித் திரிவதால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகிறது. இப்பகுதியில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும்.

மழை காலத்தில் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதை கண்டித்து, வருகிற 26ம் தேதி மாலை 4 மணியளவில், அண்ணாநகர்-மாடம்பாக்கம் பிரதான சாலையில், ஆர்ப்பாட்டம், அதிமுக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி தலைமையிலும், மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராசேந்திரன், முன்னாள் அமைச்சர் சின்னையா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Madambakkam ,Edappadi ,Chennai ,General Secretary ,Edappadi Palaniswami ,Tambaram Corporation ,protest ,Dinakaran ,
× RELATED சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில்...