×

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: கோயம்பேட்டில் கூட்டம் அலைமோதியது

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக நேற்று வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் அதிகளவில் பயணிகள் வருகை தந்ததால் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் இங்கு படிப்பு, பணி, தொழில் போன்ற பணிகளில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், சரஸ்வதி பூஜை, விநாயகர் சதுர்த்தி, கிறிஸ்துமஸ், ரமலான் பண்டிகைகளின்போது சொந்த ஊர்களுக்கு செல்வர். அப்போது வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்தவகையில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் வசிக்கும் மக்கள் நேற்று மாலை முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்ல தொடங்கினர். மேலும் நேற்று காலை முதலே முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் பயணிக்க வருகை தந்ததால் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை முதல் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இரவில் கூட்டம் அலைமோதியது. தேபோல் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒரே நேரத்தில் கோயம்பேடு வந்ததால் எம்டிசி பேருந்து, ஆட்டோ, கால்டாக்சி போன்றவற்றிலும் நெரிசல் மிகுந்து காணப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘விநாயகர் சதுர்த்தியையொட்டி வழக்கமாக இயக்கப்படும் 2,200 பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும், கோவை, மதுரை, திருச்சி போன்ற முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்….

The post விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: கோயம்பேட்டில் கூட்டம் அலைமோதியது appeared first on Dinakaran.

Tags : 350 Special Buses Movement ,Vinayakar ,Coimbett ,Coimbet ,Chennai ,Chadurdhi ,Chadurthi ,Dinakaran ,
× RELATED பதவி தந்தருளும் பால விநாயகர்