×

காஞ்சிபுரத்தில் விவசாயிகளுக்கு கடனுதவி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், பிரதமரின் உணவு பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்துடனான கடனுதவியை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்திதலைமை தாங்கினார்.  இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, வேளாண்மை இணை இயக்குநர்  டாக்டர்.இளங்கோவன், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, இணை பதிவாளர்  எஸ்.லட்சுமி,  முன்னோடி வங்கி மேலாளர்  கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக புகழேந்தி மற்றும்  நடராஜன் ஆகிய விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி மற்றும் சீரக சம்பா நெல் விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டது. மேலும், வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனைத்துறை சார்பாக  நாகராஜன்,  பரமேஸ்வரன், ராம்குமார், சடகோபன் மற்றும்  சக்தி ஆகிய விவசாயிகளுக்கு பிரதமரின் உணவு பதப்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.5,76,520 மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டது. கடந்த மாதம் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் நேர்முக உதவியாளர் விவாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும்,  விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவாயிகளால் கோரிக்கை வைக்கப்பட்டு கூட்டம் முடிந்தது….

The post காஞ்சிபுரத்தில் விவசாயிகளுக்கு கடனுதவி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Farmers Welfare Day ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...