- சத்யராஜ்
- சென்னை
- யாக்கை பிலிம்ஸ்
- கார்த்திக்
- தரன்
- வான் புரொடக்ஷன்ஸ்
- ஜெயவேல் முருகன்
- ராதாரவி
- சரண்ராஜ்
- துஷ்யந்த் ஜெயபிரகாஷ்
- கேப்ரியெல்லா
- எஸ்.ராம் சந்தோஷ்
- போபோ சசி

சென்னை: யாக்கை பிலிம்ஸ் கார்த்திக் தரன், வான் புரொடக்ஷன்ஸ் ஜெயவேல் முருகன் இணைந்து தயாரித்துள்ள படம், ‘வருணன்: காட் ஆஃப் வாட்டர்’. ராதாரவி, சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா நடித்துள்ளனர். எஸ்.ராம் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்ய, போபோ சசி இசை அமைத்துள்ளார். என்.ரமண கோபிநாத், வியாமா ராம் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். படம் குறித்து இயக்குனர் ஜெயவேல் முருகன் கூறுகையில், ‘வடசென்னையில் கதை நடக்கிறது. தண்ணீர் கேன் சப்ளை செய்யும் கம்பெனி முதலாளி ராதாரவியிடம், தென்மாவட்டத்தில் இருந்து வந்த துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் வேலை பார்க்கிறார்.
அவருக்கும், தண்ணீர் கேன் விற்கும் இன்னொரு கோஷ்டிக்கும் நடக்கும் பிரச்னைதான் படம். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்கள் பொதுவானவை என்பதையும், தண்ணீரின் அவசியத்தையும் பற்றி சொல்லும் இப்படத்தின் கேப்ஷன், ‘நீரின்றி அமையாது உலகு’. தண்ணீர் கடவுள் பேசுவது போன்ற ‘வாய்ஸ் ஓவர்’, படத்தின் பல்வேறு காட்சிகளில் இடம்பெறுகிறது. இதற்காக நடிகர் சத்யராஜ் சம்பளமே வாங்காமல் டப்பிங் பேசியிருக்கிறார். வரும் மார்ச் 14ம் தேதி படம் திரைக்கு வருகிறது’ என்றார்.

