சென்னை: தமிழில் ‘லைசென்ஸ்’ என்ற படத்தின் மூலமாக பாடலாசிரியராக மாறிய ஏ.இரமணிகாந்தன், முன்னதாக ‘துளிர்’, ‘உள்ளொளி’ ஆகிய கவிதை தொகுப்புகளின் மூலமாக கவிதை உலகுக்கு நன்கு பரிச்சயமானார். தொடர்ந்து பாடல்களையும், கவிதைகளையும் ஆர்வத்துடன் எழுதி வரும் அவர், இந்த ஒரே ஆண்டில் 500க்கும் மேற்பட்ட தன்னிசை பாடல்களை எழுதி அசத்தியுள்ளார்.
காதல், துள்ளல், சோகம், தன்னம்பிக்கை, தத்துவம், நாட்டுப்புற பாடல் என்று, அனைத்துவிதமான பாடல்களை எழுதி திரைப்பட இயக்குனர்கள், இசை அமைப்பாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். மேலும், ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கையாளும் நவீன பாடலாசிரியராகவும் இருக்கிறார். ஏற்கனவே ராஜராஜ சோழன், கீழடி உள்பட பல பாடல்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

