×

சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: கோவிலின் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிப்பு

திருவள்ளூர்: சிறுவாபுரி முருகன் கோயிலில் குடமுழுக்கு முடிவடைந்த முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து 19 ஆண்டுகளுக்கு பிறகு பாலசுப்பிரமணிய கோவிலில் குடமுழுக்கு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. குடமுழுக்கை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி முதல் செவ்வாய்க்கிழமையான இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனம் ரூ.50 மற்றும் கட்டண தரிசனம் ரூ.100 என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கோவிலின் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  …

The post சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: கோவிலின் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Churuvapura Murugan Temple ,Thiruvallur ,Sami ,Churuvapuri Murugan Temple ,Churuvapuri ,Murugan ,Temple ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி