×

இலை கட்சியின் முதல் வெற்றி வேட்பாளர் நிகழ்வுக்கு சேலம்காரர் வராததின் ரகசியத்தை சொல்கிறார் wiki யானந்தா

‘‘சேலம்காரர் ஏன் பூட்டு மாவட்ட நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பதுதான், இலை கட்சியின் வயதான ெதாண்டர்களின் கேள்வியாக இருக்காமே, உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியின் முதல் வெற்றி வேட்பாளரான     ‘பூட்டு’ மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் சமீபத்தில் மறைந்தார். கட்சியின் முக்கியமான சேலத்துக்காரர் கட்டாயம் அஞ்சலி செலுத்த வருவார் என்கிற எதிர்பார்ப்பில் கட்சியினருடன், சமூகத்தவரும் காத்திருந்தனர். மாவட்டத்தின் ‘உளறல் மாஜி’யும் கூட வந்திருந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திச் சென்றார். சேலத்துக்காரர் வருவார்.. வருவார்.. என்ற எதிர்பார்ப்பு எகிறி நின்றது. ஆனால் வரவில்லை. சென்னையில் இருந்த ‘தோழி’ விமானம் மூலம் தூங்கா நகருக்கு வந்து, பூட்டு மாவட்டத்திற்கு காரில் வந்திருந்து அஞ்சலி செலுத்தி திரும்பினார். திருச்சியில் இருந்து தேனிக்காரரும் கார் மூலம் வந்து அஞ்சலி செலுத்தி திரும்பினார். இவர்களெல்லாம் நேரில் வந்து அஞ்சலி செலுத்தித் திரும்பியதைக் கேள்விப்பட்ட மாஜிக்கள் உதயம், ஊர்ப்பெயரை முன்பெயராகக் கொண்டவர், ‘ஜக்’கில் துவங்கும் பெயர் கொண்டவரும் வந்திருந்து அஞ்சலி செய்தனர். சேலத்துக்காரரும், அவரது அணியைச் சேர்ந்த தூங்கா நகரின் முன்னாள் மந்திரியான தெர்மகோல் மற்றும் மாஜி மாநகரத் தந்தையாக ‘செல்ல’மானவரும்  எட்டிப்பார்க்காதது, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன், சமூகத்தவரிடமும் அதிருப்தியை தந்திருக்கிறதாம். இதுதான் மூத்த தலைவர்களை கவுரவிக்கும் முறையா… இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும்போதே இப்படி என்றால், முழுதாக பொதுச் செயலாளர் பதவி வந்தால் சர்வாதிகாரி போல செயல்படுவார் போல என்று இலை கட்சியினர் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஊரார் வீட்டு பணத்துக்கு, வட்டி வாங்கி சாப்பிட்டு ெசழிப்பாக வலம் வந்த செகரட்ரிகளின் கதை சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கிரிவலம்  மாவட்டத்துல செய்யார் நகர் இருக்குது. இந்த நகர்ல பாடல் பெற்ற வேதம் ஓதும்  ஈஸ்வரன் கோயில் அருகில், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இருக்குது. இந்த  சங்கத்துல 20 வருஷத்துக்கு மேலாக 4 கிளர்க்குகள் பணியாற்றி வர்றாங்களாம்.  இவங்க அதே வங்கியில செகரட்ரிகளாக பதவி உயர்வு பெற்றிருக்காங்களாம். இவங்க,  கூட்டுறவு வங்கியில டெபாசிட் செய்ய வர்ற வாடிக்கையாளர்கள் கிட்ட, என்ன  சார். இந்த வங்கியில டெபாசிட் செய்றீங்க. இங்க குறைஞ்ச வட்டிதான்  கிடைக்கும். எங்க கிட்ட கொடுங்க. நாங்க, கூடுதல் வட்டி கொடுக்குறோம்னு ஆசை  வார்த்தை கூறி, பல வாடிக்கையாளர்கள் கிட்ட பணத்தைப் பெற்று அவர்களுக்கு  முறையாக வட்டியும் கொடுத்து தனது வசதி வாய்ப்புகளை பெருக்கி வர்றாங்களாம். இந்த  டீலிங்கிற்கு ஒத்து போகாத, வாடிக்கையாளர்களுக்கு வேற டீலிங்காம். அது  எப்டின்னா. 2 கணக்கு மெத்தேடாம். ஒரு கணக்குல வாடிக்கையாளர் ெகாடுக்கும் ரூ.5  எல்லுக்கான பணத்துக்கு பத்திரம் கொடுக்குறாங்களாம், கவர்மெண்டுக்கு ஒரு  எல்லுக்கான பணம் டெபாசிட் செஞ்சதாக பத்திரம் கொடுத்து கணக்கு  காட்டுறாங்களாம். மீதமுள்ள 4 எல்ஐ, வெளியே வட்டிக்கு விடுறாங்களாம்.  வாடிக்கையாளருங்க, வட்டி கேட்டு வர்றபோது, 5 எல்க்கான வட்டியை கஸ்டமருக்கு  கொடுத்துடுறாங்களாம். யாருக்கும் சந்தேகம் வராத வகையில, தொடர்ந்து 3  செகரட்ரிகளும் இந்த வேலையை பார்த்திருக்காங்க. ஊரார் வீட்டு பணத்துக்கு,  வட்டி வாங்கி சாப்பிட்டு செழிப்பா இருந்திருக்காங்க. சமீபத்துல தான்  டெபாசிட் செஞ்ச வாடிக்கையாளர் ஒருத்தர் வங்கிக்கு சென்றபோது, கணக்குப்  பரிவர்த்தனையில, முறைகேடுகள் நடத்தியிருப்பது தெரியவந்திருக்குது. இது  தொடர்பான புகார்ல, மாவட்ட கூட்டுறவு பதிவாளர் தற்போதுள்ள செகரட்டியையும்  உடந்தையாக இருந்த பெண் கிளர்க்கையும் சஸ்பெண்ட் செஞ்கிருக்காரு.  இந்நிலையில, இந்த கூட்டுறவு வங்கியில கூட்டுக் கொள்ளையடிச்சது, யார் யார் என்று விசாரணை தொடங்கி இருப்பதால் பலரும் கலக்கத்துல இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அல்வா மாவட்ட விவகாரம் என்ன…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அல்வா மாவட்டம் மற்றும் மாநகரில் பழி தீர்க்கும் விதமாக கொலை சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து காவல் உயரதிகாரிகளின் கிடுக்கிப்பிடியால் கடந்த சில மாதங்களாக இதுபோன்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டிருந்த நிலையில் அல்வா நகரை ஒட்டிய பகுதியில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதன் எதிரொலியாக மற்றொரு தரப்பைச் சேர்ந்த வாலிபரை சிலர் குறிவைத்திருப்பதாக உளவுத்துறையினர் அறிக்கை அளித்திருந்தனர். இதுகுறித்து தச்சநல்லூர் பகுதி காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததாம். ஆனால் இதனை தச்சநல்லூர் காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் எச்சரிக்கையை காற்றில் பறக்க விட்டனர். அவர்களின் மெத்தனப் போக்கு காரணமாக கடந்த 6ம் தேதி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். உளவுத்துறை எச்சரித்தபடி போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பழிதீர்க்கும் சம்பவம் தொடராமல் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கலாம். எனவே மாநகர போலீஸ் உயரதிகாரிகள் மென்மையான போக்கை கைவிட்டு கையில் சாட்டையை எடுத்தால் மட்டும் கொலை, கொள்ளை, கஞ்சா கடத்தல் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்…’’ என்கின்றனர் விக்கியானந்தா.‘‘தாமரை ஆதரவு எம்எல்ஏ பேசும்போது மட்டும் காது ஜவ்வே கிழிவும் அளவுக்கு கைதட்டல் அதிகமாக இருந்ததன் பின்னணி என்னவாம்…’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘தாமரை ஆதரவு சுயேச்சை எம்எல்ஏவும் வணிகர் கூட்டமைப்பு தலைவருமான சங்கரமானவர், திடீரென்று அகில இந்திய வணிகர் சம்மேளனத்தின் முதன்மை துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டாராம். இதுக்கு பாராட்டு விழா நடந்தது. மாநிலத்தின் விவிஐபிக்கள் பலரும் பங்கேற்றனர். அப்போது குறைவான ஆட்களே விழாவுக்கு வந்தாங்களாம். இதில் மற்றவர்கள் பேசும்போது மட்டும் ஒருவரும் கைதட்டவில்லையாம். அதே நேரத்தில் தாமரை ஆதரவு எம்எல்ஏ  பேசும்போது மட்டும் அரங்கம் அதிர்ந்ததாம். ஆனால் எதிர்க்கட்சி எம்எல்ஏ பேசும்போது கூட்டத்தில் சத்தமே வரலையாம். என்னப்பா. இது அவருக்கு மட்டும் கைதட்றாங்க, நாம பேசினா ஒரு சத்தமும் இல்லையே என நினைத்துக்கொண்டாராம். அப்புறமாக நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோதுதான் அவருக்கு விஷயம் புரிந்ததாம். சவுண்ட் சர்வீஸ்காரரை பார்த்து கேட்டபோது அவர், தாமரை ஆதரவு எம்எல்ஏ ஒரு அசைன்மென்ட் கொடுத்தார். அவர் பேசும்போது மட்டும், கைதட்ற மாதிரி ரெக்கார்டிங் சவுண்ட் வைச்சு விடு. மீதி கூட்டத்தில் இருக்கிறவங்க பாத்துக்குவாங்கனு சொன்னார். ஏன்னா பாதிபேர் கூட்டத்திலே கோவிந்தா போடுறவங்கதானே என்ற தகவலை போட்டு உடைச்சுட்டாராம்… இதுதான் தாமரை ஆதரவு எம்எல்ஏ பேசும்போது காது பிளக்கும் அளவுக்கு கைதட்டல் சவுண்ட் வந்ததற்கு காரணமாம்…’’ என்றார் விக்கியானந்தா….

The post இலை கட்சியின் முதல் வெற்றி வேட்பாளர் நிகழ்வுக்கு சேலம்காரர் வராததின் ரகசியத்தை சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Yananda ,Salemkarar ,Leaf Party ,Buthu ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...