×

ராஜமவுலி மகேஷ் பாபு படம் ஐதராபாத் வந்தார் பிரியங்கா சோப்ரா

ஐதராபாத்: ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்துக்காக அமெரிக்காவிலிருந்து ஐதராபாத்துக்கு வந்தார் பிரியங்கா சோப்ரா. ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கு பிறகு மகேஷ்பாபு நடிப்பில் புது படம் இயக்குகிறார் ராஜமவுலி. இன்னும் பெயரிடப்படாத இந்த படம் பான் வேர்ல்டு படமாக உருவாகிறது. இப்படத்துடன் சில ஹாலிவுட் நிறுவனங்களும் கைகோர்க்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக இந்தோனேஷிய நடிகை செல்ஸீ இஸ்லான் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்து அவர் படத்தில் தனது கேரக்டரை பற்றி தெரிந்துகொண்டு நடிக்க சம்மதித்தார்.

இந்நிலையில் தனது கணவரும் ஹாலிவுட் நடிகருமான நிக் ஜோன்சுடன் அமெரிக்காவில் வசித்து வரும் பிரியங்கா சோப்ரா, அங்கிருந்து புறப்பட்டு இந்தியா வந்தார். ஐதராபாத்தில் இந்த படத்துக்காக அவருக்கு ஆடிஷன் நடைபெற்றது. அதில் அவர் கலந்துகொண்டார். ஆடிஷனுடன் சில வசனங்களையும் அவர் பேசி காட்டி நடித்திருக்கிறார். இதில் ராஜமவுலிக்கு திருப்தி ஏற்பட்டுள்ளதால் பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தில் அவருக்கு வில்லி வேடமாக இருக்கலாம் என்றும் சினிமா வட்டாரத்தில் புது தகவல் கிளம்பியுள்ளது.

Tags : Priyanka Chopra ,Hyderabad ,Rajamouli ,America ,Mahesh Babu ,
× RELATED துரோகம் பண்றாங்க: செல்வராகவன் மீண்டும் பதிவு