×

கோயில் விழாவில் நடனம் ஆடுவதில் மோதல்; 2 இளைஞர்களுக்கு கத்திக்குத்து 4 வலிபர்கள் கைது

காஞ்சிபுரம்: ஓரிக்கையில் கோயில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தின்போது நடனம் ஆடும்போது  இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இரண்டு இளைஞர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது. இது சம்பந்தமாக போலீசார் 4 வாலிபர்களை கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை, காந்திநகர் பகுதியில் மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதனையொட்டி இரவு 10 மணி அளவில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. தாரை தப்பட்டையுடன் அம்மன் வீதி உலா சென்றது. அப்போது, சில இளைஞர்கள் நடனம் ஆடிக்கொண்டு சென்றனர். குடிபோதையில் நடனம் ஆடியவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த கிருஷ்ணகுமார் (20)  என்பவருக்கு வயிற்றில் கத்தியால் கிழித்த காயமும், சதாவரம் பகுதியை சேர்ந்த அஜித் (19) என்பவருக்கு தலையில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்த படுகாயமடைந்த இருவருக்கும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பலத்த காயமடைந்த கிருஷ்ணகுமார் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த விஷ்ணுகாஞ்சி காவல் துறையினர் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக, ஈஸ்வரன் (22), ராகுல் (18), ஹரீஷ் (19), குணா (20) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  …

The post கோயில் விழாவில் நடனம் ஆடுவதில் மோதல்; 2 இளைஞர்களுக்கு கத்திக்குத்து 4 வலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Sami procession ,Orikai temple festival ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நகைக்காக மூதாட்டி கொலை!!