×

மக்கன் பேடா

தேவையான பொருட்கள்

ஜாமூன் மிக்ஸ் - 1 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
பால் அல்லது தண்ணீர் - 4-5 டேபிள்ஸ்பூன்
நட்ஸ் கலவை - 3 டேபிள்ஸ்பூன்
பொரிக்க நெய் - தேவைக்கு
பாகிற்கு...
தண்ணீர் - 2 கப்.
சர்க்கரை - 1-1/2 கப்,

செய்முறை:

முதலில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஒட்டும் பதம் வரும்வரை கொதிக்க விடவும்.பின்பு ஜாமூன் மிக்ஸ், உப்பு, பேக்கிங் சோடா, தண்ணீர் அல்லது பால் சேர்த்து மாவாக பிசைந்து 5-10 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் பிசைந்த மாவை சிறிய எலுமிச்சை அளவு எடுத்து, உள்ளே கலந்த நட்ஸ் பருப்புகளை பூரணமாக வைத்து மாவை இழுத்து மூடி, சூடான நெய்யில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இவற்றை சர்க்கரை பாகில் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து பின் நிவேதிக்கவும்.

Tags :
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…