×

ஏழை எளிய மக்கள் சுபநிகழ்ச்சி நடத்தும் வகையில் கோயில் திருமண மண்டப வாடகை குறைக்க முடிவு: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: தனியார் திருமண மண்டபத்துக்கு இணையாக வாடகை வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, கோயில்களுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் வாடகை மறு நிர்ணயம் செய்ய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கோயில் பெயரில் உள்ள திருமண மண்டபங்கள், கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட தேதி, மண்டபத்தில் மொத்த பரப்பளவு மற்றும் குளிர்சாதன வசதி மற்றும் குளிர்சாதன வசதி அல்லாத அறை விவரங்கள், திருமண மண்டபத்திற்கான வாடகை நிர்ணயம் செய்யப்பட்ட விவரம், தற்போதைய சந்தை நிலவரப்படி வாடகை உயர்த்தப்பட்டதா, திருமண மண்டபத்தில் விசேஷத்துக்கு எத்தனை நாட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது, நாள் ஒன்றுக்கு திருமண வாடகை எவ்வளவு, எத்தனை பேர் மண்டபத்தில் அமரலாம், ஒவ்வொரு மாதத்திற்கும் மண்டபத்திற்காகவும் பராமரிப்பு செலவு,மண்டபத்தின் மூலம் வருவாய் உள்ளிட்ட அனைத்து விவரங்களை அறிக்கையாக அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post ஏழை எளிய மக்கள் சுபநிகழ்ச்சி நடத்தும் வகையில் கோயில் திருமண மண்டப வாடகை குறைக்க முடிவு: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Governor Kumarubarubaran ,Chennai ,Temple Wedding Hallway ,Governor Kumarubaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்