சென்னை, டிச.20:பிரபல காமெடி நடிகரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கோதண்டராமன் உடல் நலக்குறைவால் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவருக்கு வயது 65. கோதண்டராமன் உடலுக்கு திரையுலகினர், ஸ்டண்ட் கலைஞர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இவர் ராம்கி நடித்த எல்லாமே என் பொண்டாட்டி தான், முரளி, சிவாஜி நடித்த எல்லாமே என் ராசாதான், ஒன்ஸ் மோர் உள்ளிட்ட பல படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார். மேலும் விஜய், அஜித் நடித்த பகவதி, திருப்பதி, கிரீடம், வேதாளம் போன்ற படங்களில் துணை சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார். பல படங்களில் காமெடி வேடங்களிலும் நடித்துள்ளார். கலகலப்பு படத்தில் காமெடி ஆடியாளாக நடித்திருந்தார்.