×

பாவியை மீட்கும் கிறிஸ்துமஸ்

மனிதன் பாவம் செய்ததால்தான் அவன் பாவி என்றழைக்கப்பட்டான். இந்த பாவ மனிதனுக்கு மீட்பு (அ) மன்னிப்பு தந்து அவன் உள்ளத்திலிருக்கிற கறைகளை கழுவி, குற்ற உணர்விலிருந்து விடுவித்து, சமாதானத்தையும், தெளிவையும் தருவதுதான் கிறிஸ்துமஸ். ‘‘பாவம் செய்கிறவன் பாவத்திற்கு அடிமையாய் இருக்கிறான். - (ரோமர் 6: 20) என்ற இந்த வேத வசனம் மனிதனின் அடிமைத்தனத்தை தெளிவாக புரிய வைக்கிறது. இயேசு கிறிஸ்துவை தன் உள்ளத்திலே ஏற்றுக்கொள்கிற மனிதனின் உள்ளத்திலே குற்ற உணர்வும், தவறு செய்வதற்கான தூண்டுதல் இவைகளிலிருந்து ஓய்வு பெறுகிறான்.

நேர்மையான எண்ணங்களும், தியாகமான உணர்வுகளும் கிறிஸ்துவிடமிருந்து அவனுக்கு பலனாக கிடைக்கிறது. குறிப்பாக நமது தேசத்திலும் கிறிஸ்தவர்களின் தியாகச் செயல்களை மறக்க முடியாது. கல்வி பணிகள், ஏழை சமுதாய முன்னேற்றம் அனாதைகள், குழந்தைகள் வளர்க்கப்படும் விடுதிகள், மருத்துவ தொண்டுகளை மறக்க முடியாது. இதற்கு காரணம் கிறிஸ்து அவரின் அல்லது அவரால் கிடைக்கும் பாவ மன்னிப்பும், மீட்புமே காரணம். எனவே கிறிஸ்துமஸ் என்றாலே பிறருக்கு நன்மை செய்வதே மிக முக்கிய குறிக்கோளாய் இருக்கிறது.

கிறிஸ்துவோடு இணைக்கும் கிறிஸ்துமஸ்:

மனிதன் தேவன் இல்லாமல் வாழவே முடியாது. மனிதன் தேவனிடம் ஐக்கியம் கொண்டு வாழ்வதற்காகவே சிருஷ்டிக்கப்பட்டான். ஏதோ பிறந்து, உழைத்து, உழன்று, களைந்து, தன் ஆயுள் சக்கரத்தை சுழற்றி முடிக்கும்படியாக அவன் படைக்கப்படவில்லை. மனிதன் தேவனைப்போலவே சாயலிலும், ரூபத்திலும், உண்டாக்கப்பட்டான். சர்வ வல்லமையுள்ள தேவனோடு நாம் ஐக்கியம் கொள்ளும்போது அவர் நமக்குள்ள வாசம் செய்கிறார். முற்றும் வித்தியாசமான வாழ்வை நமக்கு ஈவாகத் தருகிறார்.

ஞானத்தை, புத்தியை, வாழ்வின் நோக்கத்தை உணர்த்தி சுயநலமான வாழ்வை அல்ல எல்லோருக்கும் பொதுவான நன்மை செய்யக்கூடிய திறந்த தாராள மனதையும் நேர்மையான வாழ்வின் எண்ணங்களையும் மனதில் உதிக்கச் செய்கிறார். அவரைப் போலவே, அதாவது ஒரு குட்டி கிறிஸ்துவைப் போலவே நம்மை வாழ தேவன் விரும்புகிறார். அதற்காகவே இயேசு கிறிஸ்து முழு மனுக்குலத்திற்காக மனிதனாக பூமியில் வந்து பிறந்தார். இந்த விலை மதிப்பில்லா தேவ செயலை எல்லோருக்கும் நினைப்பூட்டுவதும், பறை சாற்றுவதுமே மெய்யான கிறிஸ்துமஸ் ஆகும்.

Tags : sinner ,
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ் யானிக் சின்னர் சாம்பியன்