×

ஐரோப்பிய நாடுகளில் 8.9 சதவீத பணவீக்கம்

பிரஸ்செல்ஸ்: ரஷ்யா, உக்ரைன் போரால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதால், உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதில், யூரோவை நாணயமாக பயன்படுத்தும் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட  19 ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பணவீக்கம் கடந்த ஜூன் மாதம் 8.6% இருந்த நிலையில், ஜூலை மாதம் 8.9% அதிகரித்துள்ளது. இது, 1997க்குப் பிறகு முதல் முறையாக ஏற்பட்ட மிக அதிகப்படியான பணவீக்கமாகும். இதன் காரணமாக, இந்த நாடுகளில் எரிபொருள் விலை 39.7 சதவீதமும், உணவுப் பொருட்கள் 9.8 சதவீதமும், பிற பொருட்களின் விலை 4.5 சதவீதமும் அதிகரித்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளிலும் விலைவாசி அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது….

The post ஐரோப்பிய நாடுகளில் 8.9 சதவீத பணவீக்கம் appeared first on Dinakaran.

Tags : Brussels ,Russia ,Ukraine ,Dinakaran ,
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி