×

இயக்குனர் சீனு ராமசாமி விவாகரத்து

சென்னை: ‘கூடல் நகர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. பின் ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ உள்பட பல படங்களைக் இயக்கியுள்ளார்.இந்த நிலையில், 17 வருட திருமண வாழ்க்கைக்கு பின் விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாகத் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவில், ‘அன்பானவர்களுக்கு வணக்கம் நானும் எனது மனைவி தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்விலிருந்து விடைபெறுகிறோம்.

இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும், அந்தப் பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும், எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.அவரும் அறிவார். இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்’ எனப் பதிவிட்டுள்ளார்.

Tags : Seenu Ramasamy ,Chennai ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!