×

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன்

சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் இயக்குனர் பயிற்சி பெற்று வந்தார். அவர் இப்போது இயக்குனர் ஆகிறார். இப்படம் பற்றி லைகா புரொடக்ஷன்ஸ் ஜிகேஎம். தமிழ் குமரன் கூறும்போது, “நீங்கள் இழந்ததை அதே இடத்தில் தேடுங்கள் என்ற மையக்கருவை சுற்றிதான் படம் நகரும்.

பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம்.தமன் இசையமைக்கிறார். படத்தில் மற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழுவினரும் பணிபுரிய அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் அதற்கான அறிவிப்புகளை வெளியிடுவோம். ஜனவரி 2025-ல் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்

Tags : Sandeep Kishan ,Jason Sanjay ,Chennai ,Laika Productions Subaskaran ,Vijay ,Canada ,Leica ,
× RELATED நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்...