×

‘தளபதி 69’ படத்தின் நான் நடிக்கவில்லை: சிவராஜ் குமார் தகவல்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 69’ படத்தில் தான் நடிக்கவில்லை என நடிகர் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு ‘விஜய் 69’ படத்தில் தன்னை நடிக்க வைக்க அணுகியதாக சிவராஜ் குமார் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்தார். விஜய் – சிவராஜ் குமார் இணைந்து நடிக்கிறார்கள் என்ற செய்தி இணையத்தை ஆட்கொண்டது.

ஆனால், தற்போது அப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார். இப்போது அளித்த பேட்டியில், சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் ஹெச்.வினோத் தன்னை சந்தித்து விஜய் படத்தில் நடிப்பது சாத்தியமில்லை எனவும், விரைவில் நல்ல கதையுடன் வேறொரு படத்தில் சந்திப்போம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார் சிவராஜ் குமார்.

இதன் மூலம் ‘விஜய் 69’ படத்தில் சிவராஜ் குமார் நடிக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘விஜய் 69’. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு அக்டோபரில் இப்படம் வெளியாகவுள்ளது.

Tags : Shivraj Kumar ,Vijay ,H. Vinod ,Vijay… ,
× RELATED விஜய் திவாஸ் தினம்: வெற்றிப் போர்...