×

தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமநதி மற்றும் கடனா அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: தென்காசி  மாவட்டம், தென்காசி வட்டம், இராமநதி பாசனம் – வடகால், தென்கால் மற்றும் பாப்பன்கால் ஆகியவற்றின் நேரடி பாசன நிலங்களுக்கு  1432-ம் பசலி கார் சாகுபடி செய்வதற்கு 25.07.2022 முதல் 11.11.2022 வரை 110  நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60 கன அடி வீதம் இராமநதி அணையிலிருந்து 168.03 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் 1008.19 ஏக்கர்  நிலங்கள் பாசன வசதி பெறும்.தென்காசி  மாவட்டம், தென்காசி வட்டம்,  கடனா பாசனம் – அரசபத்து, வடகுறுவபத்துகால், ஆழ்வார் குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லூர்கால், காங்கேயன்கால் ஆகியவற்றின் நேரடி பாசனத்திற்கு கடனா அணையிலிருந்து  2022-ஆம் ஆண்டு 1432-ம் பசலி  கார் சாகுபடிக்கு  25.07.2022 முதல் 11.11.2022 வரை 110  நாட்களுக்கு,  நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 125 கன அடி வீதம்,  664.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.  இதன் மூலம் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலுள்ள 3987.57 ஏக்கர்  நிலங்கள் பாசன வசதி பெறும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமநதி மற்றும் கடனா அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Ramanadi ,Kadana dams ,Tenkasi district ,Chennai ,Tenkasi Circle ,North Kal ,Tenkal ,Papankal ,Kadana Dam ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...