×

ஒரு கப் டீக்கு வசூலிக்கப்பட்ட ரூ50 சேவை கட்டணம் ரத்து செய்தது ரயில்வே

புதுடெல்லி: பிரீமியம் ரயில்களில் டீ, காபிக்கு வசூலிக்கப்பட்டு வந்த ரூ50 சேவைக் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ20 விலை கொண்ட ஒரு கப் டீக்கு, சேவை கட்டணமாக ரூ50 சேர்த்து ரூ70 என விற்கப்படும் ரசீது, கடந்த சில வாரங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இதற்கு விளக்கமளித்த ரயில்வேயின் ஐஆர்சிடிசி, ‘ரயில் டிக்கெட்டுடன் உணவுவையும் முன்பதிவு செய்யாமல், பயணத்தின் போது வாங்கும் பொருட்களுக்கு சேவை கட்டணம் ரூ50 வசூலிக்கப்படும்’ என கூறியது.ஆனாலும் இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், டீ, காபிக்கான ரூ50 சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘‘ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற பிரிமீயம் ரயில்களில் இனி உணவு முன்பதிவு செய்யாத பயணிகளுக்கும், ஒரே விலையில் டீ, காபி விற்பனை செய்யப்படும். அதே சமயம், காலை உணவு, மதிய உணவு போன்றவற்றிற்கு முன்பதிவு செய்யாவிட்டால், ரூ50 சேவை கட்டணம் வசூலிக்கப்படும்’’ என அதிகாரிகள் கூறி உள்ளனர்….

The post ஒரு கப் டீக்கு வசூலிக்கப்பட்ட ரூ50 சேவை கட்டணம் ரத்து செய்தது ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Railways ,New Delhi ,Shatabdi… ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...