×

ஓட்டல் பிசினஸில் கோலிவுட் பிரபலங்கள்

சென்னை: கோலிவுட் பிரபலங்கள் பலர் சமீபத்தில் ஓட்டல் பிசினஸில் இறங்கியுள்ளனர். பிரியா பவானி ஷங்கர், சென்னையில் லயம்ஸ் டின்னர் என்கிற உணவகத்தை நடத்தி வருகிறார். இது பலருக்கு தெரியாது. சினிமாவில் நடித்து எந்த பார்ட்டிகளிலும் கலந்துகொள்ளாத இவர், கிசு கிசுக்களிலும் சிக்காத இவர், ஓட்டல் பிசினசில் கலக்குகிறார். நடனத்தில் பல நடிகைகளுக்கு டப் கொடுத்து வந்த சிம்ரன் சென்னை சோழிங்கநல்லூரில் கோட்கா பை சிம்ரன் என்கிற உணவகம் வைத்துள்ளார்.

காமெடியனாகவும் ஹீரோவாகவும் கலக்கிவரும் சூரியின் ஓட்டல் மதுரையில் உள்ளது. அம்மன் என்கிற பெயர்களில் இரண்டு ஓட்டல்களை அவர் நடத்தி வருகிறார். கருணாஸ் சினிமா, அரசியல் என இரண்டிலும் கவனம் செலுத்தியபடி மனைவியுடன் சேர்ந்து சில ஓட்டல்களை நடத்தி வருகிறார். நடிகர் ஜீவா ஒன் எம்பி என்கிற உணவகத்தை சென்னையில் நடத்துகிறார்.

எந்த ஒரு பிரபலங்களின் விசேஷம் என்றாலும் அங்கு இப்போதெல்லாம் மாதம்பட்டி ரங்கராஜ் தனது சமையல் குழுவுடன் இருக்கிறார். இவர் அமெரிக்காவில் சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறாராம். நடிகர் ஆர்யா ஷீ ஷெல் எனப்படும் உணவகத்தை சென்னை வேளச்சேரி மற்றும் அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் நடத்தி வருகிறார். இயக்குனர் அமீர், ஈசிஆரில் 4ஏஎம் காஃபி என்ற ஓட்டலை திறந்துள்ளார்.

Tags : Kollywood ,CHENNAI ,Priya Bhavani Shankar ,Lime's Diner ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...