×

திரையுலகை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் அதிர்ச்சி தகவல்

சென்னை: விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கியுள்ள படம், ‘ஓ பட்டர்ஃபிளை’. ஆன்ட்ஹில் சினிமா, பாலம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க, துல்சியா நிறுவனம் கன்சல்டிங் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளது. நிவேதிதா சதீஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமிப்பிரியா சந்திரமவுலி, கீதா கைலாசம் நடித்துள்ளனர். வேதராமன் சங்கரன் ஒளிப்பதிவு செய்ய, வைசாக் சோமநாத் இசை அமைத்துள்ளார். வரும் 6ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து நிவேதிதா சதீஷ் கூறியதாவது: ‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு கடினமாக உழைத்தேன். ஒரு வருடத்துக்கு மேல் பணியாற்றியும் நான் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை. சினிமா சரிப்பட்டு வருமா அல்லது வேறு துறையில் கவனம் செலுத்தலாமா என்று யோசித்து, திரையுலகை விட்டு விலக முடிவு செய்தேன். அப்போது இப்படத்தில் நடிக்க கேட்டனர். இதுவரை நான் கேட்ட கதைகளில் இது சிறப்பாக இருந்ததால் மீண்டும் நடிக்க வந்தேன். ரிகர்சல் முடிந்து படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில், எனக்கு பெரிய அறுவை சிகிச்சை நடந்தது. படக்குழு நினைத்திருந்தால் வேறொரு நடிகையை ஒப்பந்தம் செய்திருக்கலாம். எனக்காக சில மாதங்கள் காத்திருந்தனர். இப்படம் புதிய ஜானரில், ஹியூமன் எமோஷனல் பற்றி பேசுகிறது. சிங்-சவுண்ட் முறையில் உருவாகியுள்ளது என்றார். வெங்கி, ஆனந்த் எஸ்.ஷா, விஜய் ரங்கநாதன், நிஷா பாட்டியல் இணைந்து தயாரித்துள்ளனர்.

Tags : Nivedita Sathish ,Chennai ,Vijay Ranganathan ,Anthill Cinema ,Palampur Talkies ,Tulsiya ,Sibi Chandran ,Atul ,Nassar ,Lakshmi Priya Chandramouli ,Geetha Kailasam ,Vedaraman Sankaran ,Vaishak Somnath ,
× RELATED சம்யுக்தா மேனனின் புதிய திட்டம்