×

ஹீரோவாக நடிக்க மாட்டேன்: அனிருத் திட்டவட்டம்

சென்னை: ஹீரோவாக நடிக்க மாட்டேன் என அனிருத் கூறியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கிறார், உங்களுக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை இருக்கிறதா என அனிருத்திடம் கேட்டபோது, அவர் கூறியது: ‘நீங்க ஹீரோவா நடிங்க. அதுக்கும் நான்தான் மியூசிக் பண்ணுவேன்’ என்றுதான் லோகேஷிடமும் சொன்னேன். என்னுடைய ஆர்வம் இசைதான். நான் உறுதியாக நம்புவது என்னவென்றால், இந்த 15 வருடத்தில் ஆடியன்ஸ் எனக்கு இவ்வளவு பெரிய இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழில் மட்டுமல்லாது, பல மொழிகளில், இசை கச்சேரிகளுக்கு செல்லும்போது உலகளவிலும்கூட கிடைக்கும் அன்பு, ஈடு இணையற்றது. நம்மை அவர்கள் நேசிக்கக் காரணம், நம்முடைய இசை. எனவே அந்த இசையைவிடாமல் இன்னும் பெரிய ஓட்டம் ஓட வேண்டும். என்னால் படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று பொறுமையாக நடிக்க முடியுமா எனத் தெரியவில்லை. எனக்கு பிடித்த இசையில் என்ன சிறப்பாகச் செய்யலாம் என்பதுதான் என்னுடைய சிந்தனை. அதனால் கண்டிப்பாக நடிப்பு பக்கம் போக மாட்டேன் என்றார்.

Tags : Aniruh Shyvatam ,Chennai ,Anirit ,Lokesh Kanakaraj ,Lokesh ,
× RELATED சம்யுக்தா மேனனின் புதிய திட்டம்