×

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு

சென்னை, அக்.23: தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்டிஆர்48’ (தற்காலிக தலைப்பு) படத்தில் சிம்பு நடித்து வருகிறார். தொடர்ந்து கமலுடன் இணைந்து ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். அடுத்ததாக அவர் ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தின் போஸ்டர் தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை ஏஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ், அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார்கள். படத்தின் தலைப்பு அறிவிக்கப்படவில்லை. மேலும் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் மற்ற விவரங்கள் வெளியாக உள்ளது.

Tags : Simbu ,Aswath Marimuthu ,Chennai, ,Desingu Periyasamy ,Kamal ,
× RELATED கொரோனா குமார் படம் விவகாரம் பட...