×

மிருணாள் தாக்கூர் ஆன்மிக பயணம்

டேராடூன்: மிருணாள் தாக்கூர் ஆன்மிக யாத்திரையை மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்மோராவிற்கு அருகில் உள்ள கோயில் நகரமான ஜாகேஷ்வர் தாம் என்ற இடத்தில் பிரார்த்தனை செய்யும் படங்களை அவர் பகிர்ந்துள்ளார். ‘ஒரு புனித இடத்தின் அமைதியை நான் அனுபவித்தேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். மிருணாள் தாக்கூர் தனது தங்கையான லோசனுடன் உத்தரகாண்டில் இருக்கிறார், மேலும் அங்குள்ள அனைத்து கோயில்களையும் சுற்றி வருகிறார். அவர் ஒரு நீரோடை வழியாக உலா வருவதையும், அழகிய மலைகளின் காட்சியை ரசிப்பதையும் காட்டும் படங்களையும் வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தெலுங்கில் ‘சீதா ராமம்’, ‘ஹாய் நன்னா’ மற்றும் ‘தி பேமிலி ஸ்டார்’ போன்ற படங்களில் நடித்த மிருணாள் தாக்கூர் தற்போது பாலிவுட்டில் தனது படங்களில் பிஸியாக இருக்கிறார்.

The post மிருணாள் தாக்கூர் ஆன்மிக பயணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mrinal Thakur ,Dehradun ,Jageshwar Dham ,Almora ,Uttarakhand ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஆண்டிறுதியில் விமானத்தில் பயணிக்க...