×

காமெடி கதையில் விமல் யோகிபாபு

சென்னை: விமல், யோகிபாபு நடிப்பில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புரோக்கர்களால் நிகழும் நல்லதும் கெட்டதும் கலந்த சம்பவங்களை, சிரித்து மகிழும் திரைக்கதையாக கோர்த்து, இப்படத்தை உருவாக்கியுள்ளார் தமிழன் படப்புகழ் இயக்குநர் அப்துல் மஜீத். சாம்பிகா டயானா விமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சாம்ஸ், நமோ நாராயண், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், ரங்கநாதன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை கான்ஃபிடென்ட் பிலிம் கேஃபே சார்பில் அப்துல் மஜீத் தயாரித்து இயக்குகிறார். ஒளிப்பதிவு கே. கோகுல், எடிட்டிங் ஏ.ஆர்.சிவராஜ், இசை பைஜூ ஜேக்கப், இஜே. ஜான்சன்.

The post காமெடி கதையில் விமல் யோகிபாபு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vimal Yogibabu ,CHENNAI ,Vimal ,Yogibabu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...