×
Saravana Stores

ஸ்ருதிஹாசனின் ஆங்கிலப் பாடலை கமல் வெளியிட்டார்

சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கில் ஏ.ஆர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் அஜ்மல் கான், ரியா ஹரி இணைந்து தயாரித்துள்ள புலனாய்வு திரில்லர் படம், ‘லெவன்’. நவீன் சந்திரா, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ரியா ஹரி, அபிராமி, ‘ஆடுகளம் நரேன்’, ‘வத்திக்குச்சி’ திலீபன், ரித்விகா, அர்ஜெய் நடித்துள்ளனர். இதற்கு முன்பு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘செம்பி’ ஆகிய படங்களை ஏ.ஆர் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இயக்குனர் சுந்தர்.சியிடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. ‘ஆக்‌ஷன்’ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் ‘லெவன்’ படத்தை எழுதி இயக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘இமான் இசையில் ஸ்ருதிஹாசன் பாடிய ‘தி டெவில் இஸ் வெயிட்டிங்’ என்ற ஆங்கிலப் பாடலை நான் எழுதியுள்ளேன். இது ஹீரோ மற்றும் வில்லன் பற்றிய பாடலாக உருவாகியுள்ளது. கமல்ஹாசன் வெளியிட்டார். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்ய, என்.பி.காந்த் எடிட்டிங் செய்துள்ளார். அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது’ என்றார்.

The post ஸ்ருதிஹாசனின் ஆங்கிலப் பாடலை கமல் வெளியிட்டார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kamal ,Shruti Haasan ,CHENNAI ,Ajmal Khan ,Rhea Hari ,AR Entertainment ,Naveen Chandra ,Abhirami ,Naren ,' Dileepan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சமந்தாவுடன் நடிக்க மறுக்கும் பிரபாஸ்