சலங்கை பணியாரம்

தேவையான பொருட்கள்

பச்சைப் பயறு 1 கப்
புழுங்கல் அரிசி 3 டேபிள் ஸ்பூன்
பொட்டுக் கடலை 1/4 கப்
பொடித்த வெல்லம் 1 கப்
உப்பு சிட்டிகை அளவு
ஏலக்காய்ப் பொடி 1/2 டீஸ்பூன்
எண்ணெய் பொரிக்க
அரிசி மாவு 1/2 கப்
மைதா மாவு 2 டேபிள்ஸ்பூன்

தண்ணீர் தேவையான அளவு

செய்முறை  
 
வெறும் கடாயில் பச்சைப் பயறு மற்றும் புழுங்கலரிசியை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் மிக்சியில் இந்த இரண்டையும் பொட்டுக் கடலையுடன் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். பாகு பதம் வரத் தேவையில்லை. மாவில் ஏலக்காய்ப் பொடி, சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். வெல்ல நீரை மாவில் விட்டு பிசைந்து உருட்டிக் கொள்ளவும்.இதை அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி மாவு, மைதா மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். உருண்டைகளை மாவில் முக்கி சூடான எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும். சலங்கை பணியாரம் தயார்.


Tags :
× RELATED கந்தனுக்கு கார்த்திகை விரதம்