×

வயநாட்டில் பாதித்த மக்களுக்கு உதவ கைகோர்த்த காளிதாஸ், மஹத்

சென்னை: தமிழ்நாடு மலையாளிகள் கூட்டமைப்பு (சிடிஎம்ஏ), சமீபத்தில் சென்னையில் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஓணம் பண்டிகைக்கு பிறகு கொண்டாடப்படும் பண்டிகை இது. வயநாடு நிலச்சரிவின் போது வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியை நன்கொடையாக வழங்குவதற்காக ஒரு சிறப்பு முயற்சியாக இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்து சமய, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் எம். மதிவேந்தன் மற்றும் இவர்களுடன் நடிகர்கள் மஹத் ராகவேந்திரா மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் கலந்து கொண்டனர். சி.டி.எம்.ஏ. தலைவர் பிரவீன் நன்றி தெரிவித்தனர். மேலும், தமிழ்நாட்டில் மலையாளிகளின் வாழ்வாதாரம் நலமுடன் இருப்பதற்கும் நிலச்சரிவு மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பாரட்டினார்.

 

The post வயநாட்டில் பாதித்த மக்களுக்கு உதவ கைகோர்த்த காளிதாஸ், மஹத் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kalidas ,Wayanad, Mahat ,CHENNAI ,Tamil Nadu Malayalis Federation ,CDMA ,Documentary 2024 ,Onam festival ,Wayanad ,Mahat ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கரூர் அருகே பிரபல ரவுடி தலை துண்டித்துக் கொலை!!