×

ராணுவ மேஜர் மனைவியை சந்தித்த சாய் பல்லவி

சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் ‘ரங்கூன்’ ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி யுள்ள படம், ‘அமரன்’. வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி வெளியீடாக வரும் இப்படம், காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த போரில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இதில் மேஜர் முகுந்த் வரதராஜன் கேரக்டரில் சிவகார்த்திகேயன், அவரது மனைவியாக சாய் பல்லவி நடித்துள்ளனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இதுவரை நான் ஒருவரது வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட படத்தில் நடித்தது கிடையாது. இப்போது ‘அமரன்’ படத்தில் எனது கேரக்டரில் நடிப்பது பற்றி, மேஜர் முகுந்த் வரதராஜன் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸை நேரில் சந்தித்து, அவர் சொன்ன விஷயங்களை முழுவதுமாக கேட்டுக்கொண்டேன். பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டில் அதை ஞாபகத்தில் வைத்து, எனது கேரக்டரை மெருகேற்றி நடித்தேன். இப்படத்தில் எனக்கும், சிவகார்த்திகேயனுக்கும் நடனக்காட்சிகள் கிடையாது. அது தேவைப்படவும் இல்லை’ என்றார்.

The post ராணுவ மேஜர் மனைவியை சந்தித்த சாய் பல்லவி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sai Pallavi ,Rangoon' ,Rajkumar Periyasamy ,Kamal Haasan ,Diwali ,Kashmir ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அமரன் படத்தில் கதாநாயகி பயன்படுத்திய...