×

ஓம் சக்தி, பராசக்தி கோஷம் முழங்க சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரை தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 7ம் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை மற்றும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றார். 10ம் திருநாளான இன்று தேரோட்டம் நடந்தது. காலை 9.30 மணிக்கு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகளுடன் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். காலை 10.30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.

தமிழகம் முழுவதும் இருந்துவந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளில் தேர் வலம்வந்தது. இரவு 9 மணிக்கு மேல் அம்மன் தேரில் இருந்து புறப்பாடாகி மூலஸ்தானம் சென்றடைகிறார். நாளை காலை அம்மன் பல்லக்கில், இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும் அம்மன் புறப்பாடாகிறார். 18ம் தேதி காலை பல்லக்கிலும், இரவு முத்துப்பல்லக்கிலும் ஊர்வலம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 19ம் தேதி இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

Tags : Om Shakti ,Parasakthi Kosham Kedanga Samayapuram Mariamman Temple ,
× RELATED சிவகாசியில் 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது