×

வீர அழகர் கோயில் சித்திரை விழா துவக்கம் : ஏப்.19ல் ஆற்றில் இறங்கும் அழகர்

மானாமதுரை: மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா நேற்று காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. வரும் 19ம் தேதி அழகர் ஆற்றில் இறங்குகிறார். மதுரையில் அழகர் கோயிலில் நடக்கும் சித்திரை திருவிழாவை போன்றே மானாமதுரை அழகர் கோயிலிலும் சித்திரை திருவிழா பத்து நாட்கள் நடக்கிறது. தினமும் அழகர் கருடன், யானை, ஹனுமார், சேஷ வாகனத்தில் பல்வேறு சமூக மண்டகப்படிகளில் எழுந்தருளுவார். இந்தாண்டு அழகர்கோயில் சித்திரை திருவிழா நேற்று அதிகாலை அனுக்ஞை பூஜையுடன் துவங்கியது. மூலவரான சவுந்திரராஜ பெருமாள், சவுந்திரவள்ளி தாயாருக்கு திருமஞ்சனம் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

பின்னர் உற்சவரான வீரஅழகர், ஸ்ரீதேவி, பூதேவியர்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மூலவர் சன்னதி எதிரே உள்ள சுந்தரபாண்டியன் குரட்டிற்கு வீரஅழகர் தேவியர்களுடன் எழுந்தருளினார். காலை 5.50 மணிக்கு மூலவருக்கும், உற்சவருக்கும் மஞ்சள்க யிறால் காப்பு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

அதன்பின் கோயில் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பருக்கு சிறப்பு பூஜைகள் செய்து பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. விழாவில் கீழ கொம்புக்காரனேந்தல், மானாமதுரை கிராமத்தார்கள், வளநாடு, வண்ணாங்குளம் உள்ளிட்ட திருவிழா மண்டகப்படிதாரர்கள், பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் திருக்கோலத்துடன் அழகர் எதிர்சேவை நிகழ்ச்சி ஏப்.18ம் தேதியும், அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்.19ம் தேதி அதிகாலை 6.30 மணிக்குள் நடக்கிறது.

Tags : Veera Azharkar Temple Chaitra Launch ,river ,river landing ,
× RELATED கூழாங்கல் ஆற்றில் குளிக்கத் தடை