×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் கூலியில் இணைந்தார் சத்யராஜ்

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘கூலி’. இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் மூலம் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக இணைந்துள்ளனர். அதேபோல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் முதல் முறையாக லோகேஷ் படம் இயக்குகிறார்.

இந்த புதிய கூட்டணி காரணமாக இப்படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தில் அவரது கேரக்டர் பெயர் ராஜசேகர் என வைக்கப்பட்டுள்ளது. அவரது லுக்குடன் கூடிய போஸ்டர் நேற்று மாலை வௌியிடப்பட்டது. அவரது வித்தியாசமான தோற்றம் நேற்று சன் பிக்சர்ஸ் டிவிட்டரில் வெளியானது. இதை ரசிகர்கள் பலரும் ரீடிவிட் செய்தனர். அடுத்தடுத்த நாட்களில் இப்படத்தில் நடிக்கும் மேலும் சில நட்சத்திரங்களின் லுக் இடம்பெற உள்ளது.

The post சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் கூலியில் இணைந்தார் சத்யராஜ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sathyaraj ,Rajinikanth ,Sun Pictures ,Chennai ,Sun TV Network ,Kalanithi Maran ,Lokesh Kanagaraj ,Anirudh ,Girish Gangatharan ,Rajini ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED காடாம்புலியூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 2 லட்சம் பறிமுதல்