×

ஓடிடிக்கு வருகிறது அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’

விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தமிழ் திகில் ஹாரர் கிளாசிக்கின் இரண்டாம் பாகமான  ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படம்,  வரும் செப்டம்பர் 27 அன்று ZEE5 இல் பிரத்தியேகமாக வெளியாகவுள்ளது. பி.டி.ஜி யுனிவர்சல், ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ், பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில், ஆர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி 2’. சமீபத்திய வெளியீடுகளான ‘ரகுதாத்தா’, ‘நுனக்குழி’ உள்ளிட்ட அசத்தலான படைப்புகளை அடுத்து,  இந்த ஆண்டின் அதி பயங்கரமான ஹாரர் பிளாக்பஸ்டர் “டிமான்ட்டி காலனி 2” படத்தினை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.  வரும் செப்டம்பர் 27 முதல் ZEE5 இல்  “டிமான்ட்டி காலனி 2” படத்தைக் கண்டுகளிக்கலாம். சஸ்பென்ஸ் மாஸ்டர் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்  இந்தப் படம், ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி,  ரசிகர்களை மிரட்டிய நிலையில், தற்போது டிஜிட்டலில்  ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரின் நடிப்பில், மிக மாறுபட்ட திரைக்கதையில்,  பார்வையாளர்களை இருக்கைகளின் நுனியில் நிறுத்திய, ‘டிமான்ட்டி காலனி 2’, நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.  இப்படம் திரையரங்குகளில் 55 கோடிக்கு மேல் வசூலித்து,  தமிழ் சினிமா வரலாற்றில் பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களின் வரிசையில் இடம்பெற்றது. டிமான்ட்டி காலனி 2 படத்தின் முன்னணி நடிகரான அருள்நிதி கூறுகையில்.., “டிமான்ட்டி காலனி 2 படத்தில், இரட்டை வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, முதல் படத்திலிருந்த ஸ்ரீனியின் கதாபாத்திரம் இந்த பாகத்திலும் தொடர்கிறது. மேலும்  ஸ்டைலிஷான மற்றும் அலட்சியமாக இருக்கும் ரகு எனும் இன்னொரு  பாத்திரத்தில் நடித்தது, மகிழ்ச்சி. இரண்டு வித்தியாசமான பாத்திரங்களில் நடித்தது, மிக சவாலாக இருந்தது. திரையரங்குகளில் எங்களுக்குக் கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ், மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.

 

The post ஓடிடிக்கு வருகிறது அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Arulnidhi ,OTD ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED டோபமைன்: விமர்சனம்