×

கடைசி ஆதரவையும் இழந்த பெண்ணுக்கு மம்மூட்டி ஆறுதல்

கொச்சி: வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த பிறகு சமீபத்தில் தனது வருங்கால கணவரையும் இழந்த பெண்ணுக்கு நடிகர் மம்மூட்டி ஆறுதல் கூறியுள்ளார். கடந்த மாதம் கேரளாவில் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் பலியாகினர். இந்த கோர சம்பவத்தில் ஸ்ருதி என்ற இளம்பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலியாகினர்.

ஆதரவற்று இருந்த ஸ்ருதிக்கு அவரது வருங்கால கணவர் ஜென்சன் தோளோடு தோள் நின்றார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் நடந்த ஒரு விபத்தில் ஜென்சன் உயிரிழந்தார். இப்போது ஸ்ருதிக்கு இருந்த ஒரே ஆதரவும் பறிபோயுள்ளது. இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி அறிந்த மம்மூட்டி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்ருதிக்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.

The post கடைசி ஆதரவையும் இழந்த பெண்ணுக்கு மம்மூட்டி ஆறுதல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mammooti ,Kochi ,Wayanadu ,Wayanadu region ,Kerala ,Shruti ,Mommooti ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மலையாள நடிகையின் புகாரில் பலாத்கார...