×

பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் தேர்த்திருவிழா கொடியேற்றம்

அவிநாசி: அவினாசி அருகே பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் தேர்த்திருவிழா கொடியேற்றம் நடந்தது. அவிநாசி அருகே பெருமாநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற  பழமையான கொண்டத்துக்காளியம்மன் கோயில் உள்ளது. கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் தேர்த்திருவிழா மற்றும் குண்டம் திருவிழா வரும் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று அதிகாலை 2 மணிக்கு கோயிலில் கொடியேற்றம் நடந்தது. தேர்த்திருவிழாவையொட்டி  வருகிற 17ம் தேதி வசந்தம் பொங்கல், மஞ்சள் கிணறு நிரப்புதல், தோரணம் கட்டுதல், விழாவுக்கு மஞ்சள் இடித்தல், பரிவட்டம் கட்டுதல்,  திருக்கல்யாண வைபோகம், வீரமக்களுக்கு காப்பு அணிவித்தல், மஞ்சள் நீராடுதல், பொங்கல் வைத்தல், வெள்ளை யானையில் சிறப்பு நாதஸ்வர இன்னிசையுடன் அம்மன் புஷ்ப பல்லாக்கில் திருவீதி உலா, இரவு வாணவேடிக்கை ஆகியன நடக்கிறது.

வருகிற 18ம் தேதி, காலை 11 மணிக்கு குண்டம் திறந்து பூப்போடுதல் நடக்கிறது.  தொடர்ந்து சக்தி வேல்களுக்கு மஞ்சள் நீராட்டுதல், வீர மக்களுக்கு எண்ணை வழங்குதல், படைக்கல சாவடியில் பொங்கலிடுதல், படைக்கலம் எடுத்தல், இரவு 10 மணிக்கு குதிரை படைக்கலம் புறப்படுதல், படைக்கலம் சன்னிதி அடைதல், இரவு 11 மணிக்கு பரிவார மூர்த்திகள் கன்னிமார், கருப்பராயன் முனீசுவரன் சிறப்பு வழிபாடு, அம்மை அழைத்தல் நடக்கிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 19 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு காப்புக்கட்டு பூசாரிகள் கைக்குண்டம் இறங்குதல், விரதமிருந்து வந்த வீரமக்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.  காலை 9 மணிக்கு குண்டம் மூடுதல், சிறப்பு அக்னி அபிஷேகம், அம்மனுக்கு மகா தீபாராதனை நடக்கிறது. பூத வாகன காட்சியுடன், அம்மன் புறப்பாடு, மாலை 3 மணிக்கு அம்மன்  சிங்க வாகனத்தில் திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை 5.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவை முன்னிட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் தேர்த்திருவிழா ஏற்பாடுகளை,  கோயில் செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி தக்கார் லோகநாதன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Tags : Perumannallur Kodukkaligaiyam Thariravila Kodiyady ,
× RELATED இயற்கை வடித்த லிங்கம்