×

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படிதான் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனங்களை எதிர்த்து  தொடரப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அறங்காவலர்கள் உள்ள கோயில்களில் அவர்கள் மூலமாகவே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அறங்காவலர்கள் இல்லாத கோயில்களில் அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட தக்கார்கள் மூலமாக அர்ச்சகர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்றார். அரசு தரப்பின் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும். அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்குகள் முடித்துவைக்கப்படுகின்றன. அதேசமயம் அந்த நியமனங்களால் பாதிக்கப்பட்டதாக கருதும் நபர்கள் தனிப்பட்ட முறையில் வழக்கு தொடரலாம் என்றனர். …

The post உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படிதான் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Government of Tamil Nadu ,Chennai ,Chief Justice ,Muniswar Nath Bandari ,Tamil Nadu ,
× RELATED அங்கீகரிக்கப்படாத CNG/LPG மாற்றங்கள்...