×

ராமேஸ்வரம் கோயில் சிவராத்திரி விழாவில் மண்டகப்படிக்கு எழுந்தருளிய சுவாமி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் மகா சிவராத்திரி மூன்றாம் திருநாளை முன்னிட்டு நேற்று சுவாமி, அம்பாள் கெந்தமாதன பர்வதம் மண்டபகப்படிக்கு எழுந்தருளினர். இதையடுத்து பகல் முழுவதும் கோயில் நடை அடைக்கப்பட்டது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று சுவாமி, அம்பாள் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறந்து 5 மணிக்கு ஸ்படிலிங்க பூஜை, 6 மணிக்கு சுவாமி, அம்பாள் சன்னதியில் கால பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து ராமநாத சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுன் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று காலை 8 மணிக்கு கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு பகல் முழுவதும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதிகாலை சுவாமி, அம்பாள் கெந்தமாதன பர்வதம் புறப்பாடானதை தொடர்ந்து காலை 7 மணிக்கு மேல் கோயில் நடை அடைக்கப்பட்டது.

பகல் முழுவதும் கோயில் நடை அடைக்கப்பட்டதால் மாலை 6 மணி வரை பக்தர்கள் கோயிலுக்குள் தீர்த்தமாடவும் அனுமதிக்கப்பட வில்லை.
இதனால் காலை 7 மணிக்கு மேல் அக்னிதீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள் கெந்தமாதனபர்வதம் சென்று சுவாமி, அம்பாளை தரிசித்தனர். நேற்று மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு தீபாராதனை முடிந்து சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தவுடன் கோயில் நடை திறந்து சன்னதியில் பூஜைகள் நடைபெறும்.

Tags : Lord ,Rameswaram ,Rameswaram Temple Shivarathri ,
× RELATED கடல் நீர்த்தேக்கத்தில் தடுப்புவேலி அமைத்து மீன் பிடிப்பு