×

நடிகை நடாஷாவின் பிரிவுக்கு என்ன காரணம்?

 

மும்பை: கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும், நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சும் விவாகரத்து பெறுவதாக பேச்சாக இருந்தது. ஐபிஎல் போட்டிகள் முடிந்ததில் இருந்து விவாகரத்து பேச்சு தான். இந்நிலையில் திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து தாங்கள் பிரிந்துவிட்டதாக ஹர்திக் பாண்டியாவும், நடாஷாவும் சமூக வலைதளத்தில் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். பிரிந்துவிட்டாலும் மகன் அகஸ்தியா விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கப் போகிறார்களாம்.

பிரிவு முடிவை அறிவிக்கும் முன்பு மகனுடன் மும்பையில் இருந்து கிளம்பிச் சென்றுவிட்டார் நடாஷா. விவாகரத்து குறித்த அறிவிப்பை பார்த்த ரசிகர்களோ ஹர்திக் பாண்டியாவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். அதே சமயம் நடாஷாவை கண்டபடி விளாசி வருகிறார்கள். ஹர்திக் பாண்டியாவின் சொத்துமதிப்பு ரூ. 170 கோடி ஆகும். அதில் 70 சதவீதத்தை தனக்கு கொடுக்குமாறு கேட்டிருக்கிறார் நடாஷா என கூறப்படுகிறது. இந்த காரணத்திற்காக தான் நடாஷாவை சமூக வலைதளங்களில் விளாசுகிறார்கள்.

நடாஷாவுக்கு கெரியரே இல்லை. பாண்டியாவை திருமணம் செய்து, 4 ஆண்டுகளில் அவரை பிரிந்து, சொத்தில் பெரும்பகுதியுடன் கிளம்புவது தான் அவர் திட்டம் போன்று என விமர்சிக்கிறார்கள்.ஒரு சிலர் நடாஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்கள். விவாகரத்திற்கு காரணம் நடாஷா தான் என சொல்வது தவறு. அவர் வெளிநாட்டு பெண். ஆண்களுடன் நட்பாகக் கூட பழகலாம் அல்லவா ?. அலெக்சாண்டருடன் பழகுவதை வைத்து அவருக்காக தான் பாண்டியாவை பிரிந்துவிட்டார் என சொல்லக் கூடாது.

இந்த விவாகத்திற்கு பாண்டியா கூட காரணமாக இருக்கலாமே என்கிறார்கள். 4 ஆண்டுகளில் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவர்கள் ஹர்திக் பாண்டியாவும், நடாஷாவும். திருமணமாகி மகன் வளர்ந்த பிறகு மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து கொண்டார்கள். இப்படி பாசமாக இருந்த ஜோடி பிரிய யார் காரணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சிலரோ, நடாஷா போனால் பரவாயில்லை பாண்டியா பாய். உங்களுக்கு ஏற்ற நல்ல துணை நிச்சயம் கிடைப்பார் என்கிறார்கள்.

The post நடிகை நடாஷாவின் பிரிவுக்கு என்ன காரணம்? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Natasha ,Mumbai ,Hardik Pandya ,Natasha Stankovic ,IPL ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மும்பை மாஜி போலீஸ் கமிஷனர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்