×

யாத்திசை தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் குமரன் தங்கராஜன்

சென்னை: பண்டைய தமிழர்களின் பெருமையை பண்பாடு மாறாமல் சொன்ன ‘யாத்திசை’ படத்தின் தயாரிப்பாளர் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷும், நல்ல கருத்தை நகைச்சுவையோடு கொடுத்த ‘லக்கிமேன்’ படத்தின் இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் வெப்செரிஸான ‘வதந்தி’ மூலம் புகழ் பெற்ற குமரன் தங்கராஜன் நாயகனாக அறிமுகம் ஆகிறார்.

குமரவேல், ஜி எம் குமார், லிவிங்ஸ்டன், பால சரவணன், வினோத் சாகர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்க, ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்ய, மதன் படத்தொகுப்பை கவனிக்கிறார். வாசு கலை இயக்கத்தை கையாளுகிறார். ஆறு முதல் 60 வயது வரை அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் கண்டு, ரசித்து, சிரித்து மகிழும் வகையில் இப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்தது.

 

The post யாத்திசை தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் குமரன் தங்கராஜன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kumaran Thangarajan ,Yathisai ,CHENNAI ,Venus Infotainment ,KJ Ganesh ,Balaji Venugopal ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...