×

சிறு படங்கள் வைரல் ஆவதில்லை: சாம் சிஎஸ் பேச்சு

சென்னை: எஸ்ஆர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.ஜெகதீஸ் தயாரிப்பில், வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ள படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் பி.ஜெகதீஸ் பேசும்போது, ‘நம் மெட்ராஸின் அடையாளம் எல்லா ஊர்க்காரரும் இங்கு இருப்போம், எல்லா ஊர்க்காரரும் வேலை பார்ப்போம், அதே போல் இந்த மெட்ராஸ்காரனில் எல்லாமே இருக்கிறது. எந்த ஒரு தயாரிப்பாளரும் முழு கதை கேட்டுத் தான் ஒகே செய்வார்கள், ஆனால் நான் பாதி கதை கேட்ட போதே, படத்தை ஆரம்பிக்க சொல்லிவிட்டேன். இயக்குனர் மீது இருந்த நம்பிக்கை தான் காரணம்’ என்றார்.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசுகையில், ‘பெரிய ஹீரோ படம் நல்லாயில்லை என்றாலும், அது வைரலாகிறது. ஆனால் சின்ன படத்திற்கு நல்லா இருந்தாலும் அது நிகழ்வதில்லை. ரசிகர்கள் இதைப் புரிந்து கொண்டு, சிறு படங்களுக்கு ஆதரவு தர வேண்டும்’ என்றார். இயக்குனர் இளன், நடிகர்கள் பாண்டியன், சரண், நடிகை ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post சிறு படங்கள் வைரல் ஆவதில்லை: சாம் சிஎஸ் பேச்சு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sam CS ,Chennai ,P. Jegathees ,SR Productions ,Vali Mohan Das ,Shane Nigam ,Kalaiyarasan ,Niharika ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சிவராஜ்குமாருடன் யஷ் திடீர் சந்திப்பு